தர்மபுரி, டிச. 21-
தர்மபுரி நியூ காலனி பகுதியை சேர்ந்தவர் மாது (வயது52) போலீஸ் ஏட்டுவாக பணிபுரிந்த இவர் துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாகி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபுரியை சேர்ந்த தேன்மொழி என்ற பெண்ணி டம் ரூ.39 லட்சம் வாங்கி கொண்டு நிலத்தை கிரையம் செய்யாமல் ஏமாற்றிய வழக்கில் கைதான மாது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஏட்டு மாது மீது பாலக்கோடு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் காவேரி (52) என்பவர் ஏற்கனவே தர்மபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்திருந்தார். துறை ரீதியான நடிவடிக்கையை ரத்து செய்வதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதாக அவர் மீது காவேரி புகார் கொடுத் திருந்தார்.
மேலும் ஒரு பெண் புகார்
தற்போது திருவண்ணா மலை மாவட்டம் தாணிப் பாடியை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி ரேகா (வயது 30) என்பவர் தர்மபுரி டவுன் போலீசில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஏட்டு மாது மீது புகார் மனு கொடுத்து உள்ளார்.
நான் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். ரமேஷ் என்பவர் மூலமாக மாது எனக்கு அறிமுகமானார். தமிழ்நாடு அரசு தேர்வாணை யத்தில் தனக்கு அதிகாரிகளை தெரியும் என்றும் போட்டி தேர்வு எழுதினால் அதில் தேர்ச்சி பெற வைத்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் ரூ. 10 லட்சம் வாங்கினார்.
தேர்வாணைய தேர்வு முடிவுகள் வந்தபோது நான் தேர்ச்சி பெறவில்லை. இதுகுறித்து மாதுவிடம் கேட்டபோது அடுத்ததாக வரும் தேர்வு முடிவில் பெயர் வரும் என்றும் கூறினார். ஆனால் வரவில்லை.
இதுகுறித்து கேட்டபோது அவர் பதில் எதுவும் சொல்ல வில்லை. பணத்தை திரும்ப கேட்டபோது அவரும், அவரது மனைவி காந்திமதியும் எனக்கு மிரட்டல் விடுத்தார்கள். எனவே அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டு கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். * * * போலீஸ் ஏட்டு மாது.