அமைச்சர் துரைக்கண்ணு 
செய்திகள்

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தஞ்சாவூரில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

மாலை மலர்

சென்னை:

தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்து வந்தவர், துரைக்கண்ணு. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தஞ்சாவூரில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இன்று சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.