ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள குஜ்ஜார்பாதி வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற வீரர்கள் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
சில மணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.