அப்போது தனது விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் 36 வயதாகும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத் சாதனையை உடைக்க இருக்கிறார்.
இவர் 141 போட்டிகளில் 26 ஐந்து விக்கெட், 3 பத்து விக்கெட்டுக்களுடன் 557 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இன்னும் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் மெக்ராத் சாதனையை முறியடிப்பார். இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கிறது. அப்போது இந்த சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் ஒருமுறை எனது சாதனையை ஆண்டர்சன் முறியடித்து விட்டால், அவரை எவராலும் தொட இயலாது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘நான் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது அதிக அளவில் மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு வாழ்த்துக்கள். ஒருமுறை என்னுடைய சாதனையை அவர் முறியடித்து விட்டார், அதன்பின் அவரை எவராலும் தொட இயலாது.
சாதனை என்பது அருமையானது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்ததற்காக பெருமைப்படுகிறேன்.