செய்திகள்

ஓணம் பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகை வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.