செய்திகள்

சொகுசு காரில் ஆடம்பர பிரசாரம் செய்யும் ஹேமமாலினி- சமூகவலைதளங்களில் விமர்சனம்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் போட்டியிடும் ஹேமமாலினி சொகுசு காரில் தேர்தல் பிரசாரம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. #LokSabhaElections2019 #HemaMalini

மாலை மலர்

பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் பிரபல இந்தி நடிகையும் தற்போதைய எம்.பி.யுமான ஹேமமாலினி போட்டியிடுகிறார். தீவிர பிரசாரத்தில் குதித்துள்ள ஹேமமாலினி மிகவும் பந்தாவாக அந்த தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கிறார்.

சுமார் 75 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் காரை தான் பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்.

காரில் இருந்து தலை மட்டும் வெளியில் தெரியுமாறு அந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு ஹேமமாலினி முன்பாகவும் கார் கதவிற்குப் பின்புறம் இருந்தும் அவர் வெயில் படாத வகையில், பணியாட்கள் குடைபிடிக்கிறார்கள். இத்தனை வசதிகள் செய்யப்பட்டும் வெயிலை பொறுக்க முடியாமல் கூலிங் கிளாசுடன் தொகுதியில் வலம் வருகிறார்.

இதற்கிடையே கோவர்தன் என்ற இடத்தில் விவசாயிகளிடையே டிராக்டரில் சென்று பிரசாரம் செய்வதுபோல போஸ் கொடுத்த ஹேமமாலினியை கிண்டல் செய்து காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.