அபராதம் 
செய்திகள்

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம்

ஓமலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாலை மலர்

ஓமலூர் அருகே உள்ள டேனீஸ்பேட்டை வனச்சரகத்துக்குட்ட ஜோடுகுளி ராமசாமி மலை காப்புக்காட்டில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து வனச்சரகர் பரசுராமமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மான், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாட கண்ணி வைத்திருந்தனர். இது தொடர்பாக அங்கிருந்த 3 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மேச்சேரி புக்கம்பட்டியை சேர்ந்த அருண் (வயது 38), கண்ணன் (29), கனகராஜ் (39) ஆகியோர் என்பதும், இவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.