செய்திகள்

துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

மெக்சிகோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. #ISSFWC #OmPrakashMitharval #ManuBhaker

மாலை மலர்

இதில் கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. இந்த ஜோடி 476.1 புள்ளிகள் பெற்றது. ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் - சாண்ட்ரா ரிட்ஸ் ஜோடி 475.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது. பிரான்சின் கோபர்வில்லி, பவுகியூட் ஜோடி 415.1 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றது. இந்தியாவின் ரிஸ்வி, அகர்வால் ஜோடி 372.4 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.

முன்னதாக நடைபெற்ற கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், மெஹுலி கோஷ் ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. இந்த ஜோடி 435.1 புள்ளிகள் பெற்றது. சீனாவின் சூ, சென் ஜோடி 502 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றது. இதுவே கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் உலக சாதனையாகும். ரோமானியாவின் கோமன், மோல்டோவேனு ஜோடி 498.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தியாவின் குமார், சண்டேலா ஜோடி 392.6 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.