செய்திகள்

மக்களவை சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்

மக்களவை சபாநாயகராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்பி ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கி உள்ள நிலையில், சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில், பாஜக எம்பி ஓம் பிர்லா (வயது 57) தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஓம் பிர்லா மூன்று முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.