ஓம் பிர்லா 
செய்திகள்

திருப்பூர் பஸ் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஓம் பிர்லா, ஜெய்சங்கர் இரங்கல்

திருப்பூரில் நடந்த பஸ் விபத்தில் பலியானோர் குடும்பத்க்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

திருப்பூர் அருகே அவினாசியில் நடந்த பஸ் விபத்தில் 20 பேரும், சேலத்தி நடைபெற்ற சாலை விபத்தில் 7 பேரும் பலியாகினர். திருப்பூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருப்பூரில் நடந்த பஸ் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பஸ் விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT