செய்திகள்

குரும்பூர் அருகே முதியவர் தற்கொலை

குரும்பூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

குரும்பூர்:

குரும்பூர் அருகே உள்ள வடக்குநல்லூரை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது66). விவசாயி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். 

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.