முதியவர் உயிரிழப்பு 
செய்திகள்

தொப்பூர் அருகே பூச்சி மருந்து குடித்த முதியவர் உயிரிழப்பு

தொப்பூர் அருகே பூச்சி மருந்து குடித்த முதியவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்துள்ள மேல்ஈசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது70). இவர் கடந்த 10-ந்தேதி அன்று வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். 

இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.