செய்திகள்

நொய்யல் அருகே முதியவர் பிணம்

நொய்யல் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே நொய்யல் ஆற்றின் புதிய பாலத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் இறந்து கிடந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.