தருமபுரி:
தருமபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டியை அடுத்துள்ள பறையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது83). இவர் சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக சாமிக்கண்ணு உயிரிழந்தார்.
இது குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.