திருட்டு 
செய்திகள்

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் முதியவரின் செல்போன் திருட்டு

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் முதியவரின் செல்போன் திருட்டு போன சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் காலனி பகுதியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 60). இவருடைய பேரன் உடல் நலக்குறைவு காரணமாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பேரனை அருகிலிருந்து கவனித்து வந்த அழகேசன் அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது படுக்கையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் திருட்டு போனது.

இதுதொடர்பாக அழகேசன் அளித்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.