செய்திகள்

மும்பையில் உபர், ஓலா டிரைவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மும்பையில் உபர் மற்றும் ஓலா நிறுவனத்தின் டிரைவர்கள் சம்பள பிரச்சனை காரணமாக இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #uber #ola

மாலை மலர்

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உபர் மற்றும் ஓலா டாக்சி நிறுவனங்களின் டிரைவர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் போக்குவரத்து பிரிவான மகாராஷ்டிரா நவநிர்மாண் வக்தூக் சேனா அழைப்பின் பேரில் இந்த போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இதுகுறித்து பேசிய அவ்வமைப்பின் தலைவர் சஞ்சய் நாசிக், 'மும்பையில் உபர் மற்றும் ஓலா போன்ற டாக்சி நிறுவனங்களின் வேலைப்பார்க்கும் டிரைவர்களுக்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை. தற்சமயம் தொழில் மிகவும் மந்தமாக உள்ளது. அதனால் டிரைவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு தகுந்த வருமானம் கிடைக்க உபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனில் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லும்' என தெரிவித்தார்.

இது குறித்து உபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், போராட்டத்தால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத விதம் பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். #uber #ola #tamilnews