2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியவரான 22 வயதான ஜப்பானின் ஒகுஹரா உலக பேட்மிண்டனில் பதக்கத்தை சொந்தமாக்கியது இதுவே முதல் முறையாகும்.
அவர் கால்இறுதியில் ரியோ ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினையும் (ஸ்பெயின்) அரைஇறுதியில் 2012 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நேவாலையும், இறுதி ஆட்டத்தில் ரியோ ஒலிம்பிக்கின் ‘வெள்ளி’நாயகி சிந்துவையும் தோற்கடித்து மகுடம் சூடியிருப்பது கவனிக்கத்தக்கது.