ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்களில் நாள்தோறும் 2 முறை கிருமி நாசினிகள் தெளித்து தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். மேலும் காவலர் இல்லாத ஏ..டி.எம். மையங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்.
ஓசூர் மாநகராட்சி பகுதியில் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் எவரேனும் வந்து தங்கியிருப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்டவரின் விபரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் ஓசூர் தாசில்தார் அலுவலகத்திற்கு உடனடியாக மாநகராட்சியின் வெளிப்புற அலுவலர்கள், பணியாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 250-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் இயங்கி வருகிறது. இதில் ஒரு சில மையங்களில் மட்டும் காவலாளிகள் பணியாற்றி வருகின்றனர். அதனால் காவலாளிகள் இல்லாமல் இயங்கி வரும் ஏ.டி.எம். மையங்களை மூட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.