செய்திகள்

போனில் அதிகாரி போல் பேசி மூதாட்டி வங்கி கணக்கில் ரூ.1.67 லட்சம் அபேஸ்

வங்கி அதிகாரி போல் பேசி மூதாட்டிடம் ஏ.டி.எம். ரகசிய எண்களை பெற்று கொண்டு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர்.

மாலை மலர்

வேலூர்:

பழைய காட்பாடியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 65). இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை வங்கி அதிகாரி என அறிமுகம் செய்தார்.

பிறகு, உங்களது சேமிப்பு கணக்கில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றுக் கூறி ஏ.டி.எம். ரகசிய எண்களை பெற்று கொண்டு அழைப்பை துண்டித்தார்.

சிறிது நேரத்தில் ஆன் லைன் மூலம் லட்சுமியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் களவாடப்பட்டது. இது குறித்து அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார்.

பிறகு, வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் லட்சுமி புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.