புவனேஸ்வர்:
ஆண்டுதோறும் மே 12-ம் தேதி உலக செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டில் சிறந்த செவிலியராக பணியாற்றிய ஃப்ளோரன்ஸ் நைட்டிங் பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம், குன்ஜம் மாவட்டத்தை சேர்ந்த நர்ஸ் கிரிஷ்ண குமாரிக்கு ஃப்ளோரன்ஸ் நைட்டிங் கேல் விருது வழங்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குமாரிக்கு விருதினை வழங்கி சிறப்பித்தார். இதற்காக ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் மெடலும், ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
கன்ஜம் மாவட்டத்தில் உள்ள குகுடகாந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருஷ்ண குமாரி 18 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியதாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
விருது பெறுவதற்கு முன்பாக குமாரி கூறுகையில், “இந்த விருது வாங்குவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். எனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையை அனாதை குழந்தைகளின் கல்விக்காக கொடுக்க உள்ளேன்” என்றார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நைட்டிங் கேல் 1820 மே 12-ம் தேதி பிறந்தவர். நைட்டிங் கேல் நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர். தொடர்ந்து பல ஆண்டுகள் செவிலியர் பணி ஆற்றினார். செவிலியர் பள்ளிகள் நடத்தினார். முதல் உலகப் போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்தார். இரவில் விளக்கு வெளிச்சத்தில் நைட்டிங் கேல் இருப்பது போன்ற படம் மிகவும் பிரபலமானது.