செய்திகள்

பாராளுமன்ற வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்த ஒடிசா எம்.பி.

பாராளுமன்ற வளாகத்தில் ஒடிசா எம்.பி. திடீரென தவறி விழுந்ததில் காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் அமர்வின் கடைசி நாள் கூட்டம் இன்று தொடங்கியது.

இந்நிலையில், பாராளுமன்றத்திற்கு வந்திருந்த ஒடிசா மாநில எம்.பி. ஏ.வி.சுவாமி திடீரென பாராளுமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவலை மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்தார்.

ஏ.வி.சுவாமி ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட சுயேட்சை எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.