புவனேஸ்வர்:
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நேற்றைய போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4x100 தொடர் ஓட்டத்தில் பங்குபெற்ற இந்திய அணி வீரர்கள், விதியை மீறி ஓடியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் ஓடும் போது வீரர்கள் கோலை (சிறிய கம்பு) மாற்ற கொடுக்கப்படும் 20 மீட்டர் எல்லைக்குள் அவர்கள் சரியாக மாற்றி கொள்ளாததால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நடுவர்கள் குழுவினர் அறிவித்தனர். இதனால், இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு பறிபோனது.
கோப்பு படம்
இந்திய அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.