செய்திகள்

பயிற்சி மருத்துவர்களின் உதவித்தொகை ரூ.5000 உயர்வு - ஒடிசா அரசின் புத்தாண்டு பரிசு

ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் பயிற்சி மருத்துவர்களின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

புவனேஸ்வர்:

இதுதொடர்பாக, இன்று விளக்கம் அளித்துள்ள ஒடிசா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி பிரதாப் ஜேனா, ‘ஸ்ரீ ராமச்சந்திரா பஞ்ச் மருத்துவ கல்லூரி, மகாராஜா கிருஷ்ண சந்திரா கஜபதி மருத்துவ கல்லூரி மற்றும் வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றும் அரசு பயிற்சி மருத்துவர்களின் மாதாந்திர உதவித்தொகை ஐயாயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்ட இந்த உதவித்தொகை 1-4-2017 தேதியில் இருந்து கணக்கிட்டு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.