செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - ஒடிசா அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு

பானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒடிசா மாநில அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். #KamalHaasaan

மாலை மலர்

சென்னை:

ஒடிசாவில் பானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு சிறப்பாக மேற்கொண்டது. லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதனால் பலத்த உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட மாநில அரசையும் முதல்வர் நவீன் பட்நாயக்கையும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒடிசா அரசை மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பானி புயலை ஒடிசாவில் கையாண்ட விதம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒடிசா மாநில அரசுக்கு பாராட்டுக்கள். சுயமரியாதை உள்ள எந்த வொரு அரசும் ஒடிசாவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் நாடு இன்னும் கஜா புயலை நினைத்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasaan