புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது.
இந்த சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் பீஜப்பூர் மற்றும் ஹின்ஜிலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நவீன் பட்நாயக் 5-வது முறையாக முதல் மந்திரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளில் பீஜப்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும், ஹின்ஜிலி தொகுதி எம்.எல்.ஏவாக நீடிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.