செய்திகள்

100மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற டுட்டீ சந்த்-விற்கு 1.50 கோடி ரூபாய் பரிசு- ஒடிசா முதல்வர்

100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற டுட்டீ சந்த்-விற்கு 1.5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார். #AsianGames2018

இறுதிப் போட்டியில் சீனா (2), பஹ்ரைன் (2), கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மலேசியா ஆகிய வீராங்கனைகளுடன் டுட்டீ சந்த் பதக்கத்திற்கு மல்லு கட்டினார். விசில் ஊதியதும் டுட்டீ சந்த் சிட்டாக பறந்தார். இதனால் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11.32 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த 2-வது இடம் பிடித்தார்.

பஹ்ரைன் வீராங்கனை எடிடியோங் ஓடியோங் 11.30 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார். டுட்டீ சந்த் 0.2 வினாடியில் தங்கத்தை பறிகொடுத்தார்.

SCROLL FOR NEXT