செய்திகள்

பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்து தரையில் விழுந்த பஸ் - 2 பேர் உயிரிழப்பு

ஒடிசாவில் இன்று பாலத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

மாலை மலர்

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து பவானிபாட்னா நோக்கி இன்று காலை தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கலாகந்தி அருகே சென்றபோது முன்னால் சென்ற மற்றொரு பேருந்தை முந்திச்செல்ல டிரைவர் முயற்சித்தார். அப்போது பேருந்து நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துகொண்டு கீழே விழுந்தது.

சுமார் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் பஸ்சின் முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. பயணிகள் ஒருவர்மீது ஒருவர் விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், பஸ் கண்டக்டர் மற்றும் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.