நகை பறிப்பு 
செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே நர்சை தாக்கி நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

ஒட்டன்சத்திரம் அருகே நர்சை தாக்கி நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையபட்டியை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி அனிதா (வயது 30). இவர் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், திடீரென்று அனிதாவை தாக்கினர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை அந்த வாலிபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து அனிதா, ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே ஒட்டன்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த திருப்பதி மகன் வினோத்குமார் (25), செல்வம் மகன் ராஜா (25) என்பதும், நர்சு அனிதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.