ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசமரத்துப் பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி கவிதா (வயது 36). இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். கடந்த 16.3.2014-ந் தேதி குடும்ப செலவுக்காக அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார்.
அதற்காக மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் வட்டி கெகடுத்து வந்தார். கடந்த 2 மாதமாக வட்டி செலுத்த முடியவில்லை.
இதனால் ஈஸ்வரன் அவரது மனைவி கல்பனா, ஈஸ்வரனின் மாமனார் ராஜேந்திரன் ஆகியோர் கவிதாவின் வீட்டுக்கு சென்று அவரது வீட்டை எழுதி தருமாறு தகராறு செய்தனர்.
இது குறித்து கவிதா ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.