விபத்து பலி 
செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதி விவசாயி பலி

ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்த நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65). விவசாயி. இவர் நேற்று காலை நாயக்கனூர் அருகே புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று, முத்துசாமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT