செய்திகள்

வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கு: அக்டோபர் 2-ஆம் தேதி விசாரணை ஆரம்பம்

வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜாங் நாம் கொலை வழக்கில், அக்டோபர் 2-ஆம் தேதி முதல் விசாரணை நடத்தப்படும் என மலேசிய நீதிபதி தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு
ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

இதற்கிடையே, கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான (தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மலேசிய போலீசார் வியட்நாமை சேர்ந்த டோன் தி ஹுவாங் என்ற பெண்ணையும், இந்தோனேசியாவை சேர்ந்த சிதி ஐஸ்யா என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு மலேசிய நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT