புதுடெல்லி:
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
பிரபல ஆங்கில ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸ் நடத்தும் தலைமையாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா புதுடெல்லி வந்துள்ளார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, தனது அதிபர் பதவி காலத்தில் இருமுறை இந்தியாவுக்கு வந்ததை நினைவு கூர்ந்தார். இந்தியர்களாக தங்களை அறிவித்துகொண்ட முஸ்லிம்களை இந்தியா பராமரித்து, செழிப்பூட்ட வேண்டும் என கேட்டு கொண்டார்.
பின்னர், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற ஒபாமா அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை மீண்டும் ஒருமுறை சந்தித்துப் பேசியதிலும், ஒபாமா பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்தும் அவரது புதிய முயற்சிகளை அறிந்து கொள்வதிலும் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.