சென்னை:
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “குறிப்பிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை தக்க வைக்கலாம்” என்று கூறினார்,
மேலும், ஓ.பன்னீர் செல்வமின் பெயரை குறிப்பிடாமல் “கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்களே, மற்றவர்களை களங்கம் விளைவித்ததாக நடவடிக்கை எடுக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். இவர்களின் ஆட்சி இன்னும் 3 மாதத்திற்கு மட்டுமே தொடரும்” என்றும் கூறினார்.
இது குறித்து அ.தி.மு.க ஒருங்கினைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு “கனவு உலகத்தில் இருந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது” என்று பதிலளித்தார். கூறினார்.