செய்திகள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த மனு கொடுத்துள்ளோம்: ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தேர்தல் கமி‌ஷனிடம் மனு கொடுத்துள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மாலை மலர்

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு அ.தி.மு.க.வின் 3 அணிகளும் ஆதரவு கொடுத்தது பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்து இருப்பாரோ அதனை 3 அணிகளும் எடுத்துள்ளன. இதில் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.


இதனை வைத்து அ.தி.மு.க. அணிகள் இணையுமா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கான குழு கலைக்கப்பட்டுவிட்டதால் அணிகள் இணைப்புக்கான வழியில்லை.

அ.திமு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனில் மனு கொடுத்துள்ளோம். அவர்களது பதிலை பொறுத்து அடுத்த முடிவுக்கு வருவோம்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறிவருவது அவரது தனிப்பட்ட கருத்து.