டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
மார்ட்டின் கப்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் கொலின் முன்ரோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 18 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த முன்ரோ 23 பந்தில் 66 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
இவரது அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து 9 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் குவித்தது. இந்நிலையில் மழை குறுக்கிட்டது. குறிக்கிட்ட மழை நீண்ட நேரம் நீடித்ததால் போட்டி அத்துடன் கைவிடப்பட்டது.