செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 286/7

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது.

மாலை மலர்

நியூசிலாந்து அணியின் ராவல், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 22 ரன்கள் எடுத்த நிலையில் லாதம் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ராவல் உடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கேன்வில்லிம்சன் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய ராவல் 84 ரன்கள் சேர்த்தார்.


84 ரன்கள் சேர்த்த ராவல்

 நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 153 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. கேன் வில்லியம்சன், ராவல், டெய்லர் (16), நிக்கோல்ஸ் (13), சான்ட்னெர் (24) அடுத்தடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்தி திணறியது.

முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த கிராண்ட்ஹோம், இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடினார். ஆனால், 63 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து முதல்நாள் ஆட்ட முடிவில் 87 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது.


43 ரன்கள் சேர்த்த கேன் வில்லியம்சன்