இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியதோடு 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
பணிச்சுமை காரணமாக எஞ்சிய போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்றைய போட்டி 200-வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும். தசைப்பிடிப்பால் கடந்த போட்டியில் பங்கேற்காத டோனி, இன்றைய போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் சுப்மான் கில் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், சுப்மான் கில், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், கிராண்ட்ஹோம், டாட் ஆஸ்ட்லே, மேட் ஹெண்ட்ரி, டிரென்ட் போல்ட். #NZvIND