டிரென்ட் போல்டு 10.4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்தினார். டிம் சவுத்தி 10 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
ராவல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் லாதம் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். லாதம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச அளவில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
31 வயதாகும் ஸ்டூவர்ட் பிராட் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இதுவரை 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 15 முறை 5 விக்கெட்டுக்களும், 2 முறை 10 விக்கெட்டுக்களும் அடங்கும்.
இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். வார்னே 708 விக்கெட்டுக்களும், அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.