நீல் வாக்னர் மற்றும் டிரென்ட் போல்ட் 
செய்திகள்

வெலிங்டன் டெஸ்ட்: நியூசிலாந்தின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 211 ரன்னில் சுருண்டது

வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 211 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #NZvBAN

மாலை மலர்

அதன்படி தமிம் இக்பால், ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷத்மான் இஸ்லாம் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 15 ரன்னிலும், முகமது மிதுன் 3 ரன்னிலும் வெளியேறினார்கள்.


தமிம் இக்பால்

தொடக்க வீரர் தமிம் இக்பால் சிறப்பாக விளையாடி 74 ரன்கள் சேர்த்தார். தமிம் இக்பாலை தவிர மற்ற வீரர்கள் நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட், நீல் வாக்னர் ஆகியோரின் வேகப்பந்தை வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் முதல் இன்னிஙசில் 211 ரன்னில் சுருண்டது. டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டும், நீல் வாக்னர் 4 விக்கெட்டுக்களும் கைப்பற்றினர்.