தற்கொலை 
செய்திகள்

திண்டுக்கல் அருகே நர்சிங் மாணவி திடீர் தற்கொலை

திண்டுக்கல் அருகே காதலை பெற்றோர் கண்டித்ததால் நர்சிங் மாணவி திடீர் என்று தற்கொலை செய்துகொண்டார்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டியை அடுத்த கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்தவர் கருணாகரன். கூலி தொழிலாளி. இவரது மகள் நாகதேவி(வயது19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் நாகதேவி அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்தாராம். இந்த விவரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து மாணவியை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் நாகதேவி மனவேதனை அடைந்தார். இதை தொடர்ந்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீர் என்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி சாணார்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.