செய்திகள்

தக்கலை அருகே நர்சிங் மாணவர் மாயம்

தக்கலை அருகே நர்சிங் மாணவர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் மாணவரை தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

தக்கலை சேரிக்கடை பகுதியை சேர்ந்தவர் ஹரிஸ். இவரது மகன் விஷ்ணு (வயது 20). இவர் தலக்குளத்தில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த விஷ்ணு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் கல்லூரிக்கு செல்லாமல் அவர் மாயமானார்.

இதுகுறித்து மாணவரை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். அவர் எங்கும் இல்லாததால் தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவரை தேடி வருகின்றனர்.