செய்திகள்

ஒத்தக்கடை அருகே நர்சிங் மாணவி மாயம்

ஒத்தக்கடை அருகே மாயமான நர்சிங் மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

மதுரை:

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள மாயாண்டி பட்டியைச் சேர்ந்தவர் முன்னமலை. இவரது மகள் மாலினி (வயது 18). இவர் மதுரையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு மாலினி வெளியே புறப்பட்டார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து முன்னமலை ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர்.