செய்திகள்

மரக்காணம் அருகே நர்சிங் மாணவி மாயம்

மரக்காணம் அருகே நர்சிங் மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

மரக்காணம்:

மரக்காணம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் பொன்மொழி (வயது 17). இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று பொன்மொழி முருக்கேறியில் இருந்து திண்டிவனத்துக்கு பஸ்சில் சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் பொன்மொழியை தேடினர். எங்கும் அவர் இல்லை.

இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பூமாலை வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவி பொன்மொழியை தேடி வருகின்றனர்.