செய்திகள்

அரியூரில் நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

நர்சிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே அரியூர் அனந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சரோஜினி (வயது 20). இவர் அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று கல்லூரி சென்று வருவதாக சரோஜினி பெற்றோரிடம் கூறி சென்றார்.

ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சரோஜினி இல்லை.

இதையடுத்து சரோஜினியின் பெற்றோர் தங்களது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சரோஜினியை தேடி வருகிறார்கள்.