செய்திகள்

போக்குவரத்து ஊழியர் போராட்டத்துக்கு தீர்வுகாண வேண்டும்: என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகை நெருங்குகின்ற நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு சுமூகமான தீர்வுகாண வேண்டும் என்று என். ஆர். தனபாலன் வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி நிலை பற்றாக்குறையை காரணம் காட்டி போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகையை அரசு முடக்கியிருக்கிற நேரத்தில் எம்.எல். ஏ.க்களுக்கு சம்பள உயர்வு மசோதா தாக்கல் செய்திருப்பது கண்டிக் கத்தக்கது.

பொங்கல் பண்டிகை நெருங்குகின்ற நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு சுமூகமான தீர்வுகாண வேண்டும். முதல்வர் தாமதிக்காமல் சம்மந்தப்பட்டவர்களை அழைத்து அவர்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். #tamilnews