செய்திகள்

நொய்யல் அருகே கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

நொய்யல் அருகே கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் பங்களா நகர் பகுதியில் நடைபெற்றது.

மாலை மலர்

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜின் உத்தரவின் பேரில் கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் குழந்தை சாமி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் துரைசாமி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி மண்டல இணை இயக்குநர் கதிர்வேல் பரிந்துரையின்பேரில் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம் நொய்யல் அருகே பங்களா நகர் பகுதியில் நடைபெற்றது.

முகாமில் நொய்யல், கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் டாக்டர் உஷா தலைைமயில் மருந்தக உதவியாளர் மாலதி ஆகியோர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, நொய்யல் பங்களா நகர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பசு மாடுகளுக்கும், எருமை மாடுகளுக்கும், கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

வெள்ளாடுகளுக்கு குடல் புழு நீக்கமும், நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசியும் போடப்பட்டது. பசு மாடுகளுக்கும், வெள்ளாடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. பசு மாடுகளுக்கும், எருமை மாடுகளுக்கும், வெள்ளாடுகளுக்கும், நாய்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

டாக்டர் உஷா கோமாரி நோய் கால்நடைகளை தாக்காமல் இருப்பதற்கான வழி முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். முகாமில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெற்றனர்.