கோப்புபடம் 
செய்திகள்

நொய்யல் அருகே மது விற்ற 20 பேர் கைது

நொய்யல் அருகே மது விற்பனை செய்த 20 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

நொய்யல்:

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம், மசக்கவுண்டன் புதூர் பிரிவு, மூலிமங்கலம், மசக்கவுண்டன் புதூர் பிரிவு அருகே டாஸ்மாக் கடை பின்புறம், அதியமான்கோட்டை, பெரிய ரங்கம்பாளையம், நொய்யல் குறுக்குச்சாலை, தளவாபாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு, சட்டவிரோதமாக ஏராளமானோர் மது விற்பனை செய்வதாக, அந்தந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பலர் மது விற்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்தந்த பகுதியை சேர்ந்த பால்ராஜ்(வயது 33), சத்தியமூர்த்தி(38), குமார்(33), சங்கீதா(27), பாலகிருஷ்ணன்(60), சுப்பிரமணி(63), மணி(55), திருநாவுக்கரசு(53), நீலமணி(24), ராஜேஷ்(34), லோகநாதன்(36), ராஜசேகரன்(27), மகுடேஸ்வரன்(45) உள்பட சுமார் 20 பேரை கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.