செய்திகள்

பார் கவுன்சில் தேர்தல்: விடுதலை சிறுத்தை வழக்கறிஞர்கள் அறிவிப்பு

பார் கவுன்சில் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர் பேரவைக்கான (பார்கவுன்சில்) தேர்தல் மார்ச் 28-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் வழக்கறிஞர்கள் பார்வேந்தன், வில்லவன் கோதை ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வழக்கறிஞர்கள் இடையே வாக்கு சேகரிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை மற்றும் புதுச்சேரி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் பணிக்குழுக்கள் விரைவில் நியமிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.