செய்திகள்

இந்திய பொருளாதார நலிவிற்கு பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. திட்டங்கள் தான் காரணம் - மன்மோகன் சிங்

பா.ஜ.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. திட்டங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலிவடைந்து விட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

மாலை மலர்

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இதையடுத்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அருண் ஜெட்லி கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சூரத்தில் தொழிலதிபர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:-

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு மோடியின் திட்டங்கள் தான் காரணம். பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. திட்டங்களினால் சீனா போன்ற நாடுகள் மட்டுமே பயன்பற்றுள்ளன. ஆனால் இந்திய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

பணமதிப்பிழப்பு திட்டத்தினால் ஜிடீபி வளர்ச்சி மிகவும் குறைந்துவிட்டது. இதனால் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே செல்கிறது. மக்களின் தொழில்கள் நலிவடைந்தன. மேலும் புதியதாக தொழில்தொடங்குபவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு மோடியின் ஆட்சியை மன்மோகன் சிங் தாக்கி பேசியுள்ளார்.

சூரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அருண் ஜெட்லி, “10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி ஊழல் மிகுந்தது. அந்த அரசாங்கம் தலைவன் இல்லாத அரசாங்கம். அலுவலகத்தில் மட்டுமே பிரதமர் இருந்தார். அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.”, என கூறினார்.

மேலும், குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி அங்குள்ள முக்கிய இந்து கோவில்களுக்கு செல்வது குறித்து பேசிய அருண் ஜெட்லி, “பாஜக தான் இந்து ஆதரவு கட்சி என மக்களுக்கு தெரியும். அப்படியிருக்கையில் யாராவது நகலை விரும்புவார்களா?”, என தெரிவித்தார்.

இவ்வாறு இருவரும் ஒருவர் கட்சியை ஒருவர் தாக்கி பேசியுள்ளனர்.