போதை சாக்லேட்டுகள். 
செய்திகள்

திருப்பூரில் பனியன் தொழிலாளர்களுக்கு போதை சாக்லேட்டுகள் விற்பனை - வடமாநில வாலிபர்கள் கைது

உத்தரப்பிரதேசத்தில் இருந்து போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து 2பேரும் விற்றுள்ளனர்.

மாலை மலர்

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் பெருமாநல்லூர் போலீசார் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நியூ திருப்பூர் ரவுண்டானா பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் முபாரக்பூர் பகுதியை சேர்ந்த திரிலோகி சொங்கர் (வயது 27), கியாமுதின்(30)என்பதும் இருவரும் நியூ திருப்பூர் பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இருவரும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து நியூ திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் தொழிலாளர்களுக்கு ஒரு சாக்லேட்டை ரூ. 20வீதம் விற்று வந்துள்ளனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3.5 கிலோ போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.